அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்.. கதவை உடைத்து வெளியேறிய மேயர், துணை மேயர்
புதுக்கோட்டை மாநகராட்சி மேயர், துணை மேயரைக் கண்டித்து, அ.தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை வெளியே விடாமல் அரங்கு முன்பாக அமர்ந்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அ.தி.மு.க கவுன்சிலர்களின் செயலால் கோபமடைந்த மேயர், துணை மேயர், திமுக கவுன்சிலர்கள் ஆகியோர் மாமன்ற கூட்ட அரங்கின் மற்றொரு கதவை உடைத்து வெளியேறினார்கள்.