24 நிமிடத்தில் 49 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (28.07.2023)

Update: 2023-07-28 04:34 GMT

கடலூரில் மீண்டும் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால், இரண்டாவது நாளாக இரவுநேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு கிராமப்புற பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நெய்வேலி என்எல்சி விவகாரத்தில், மக்களின் நலன் கருதி முதலமைச்சர் உரிய நடவடிக்கையை எடுப்பார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்எல்சி சுரங்க விரிவாக்கம் தொடர்பாக கடலூர் ஆட்சியர் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறினார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியின் 2வது சுரங்க பணிக்கு கால்வாய் வெட்டும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் பணிகள் நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்எல்சி நிவாரணத்தை தூக்கி குப்பையில் போட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேசிய அவர், விளைந்த பயிரை இயந்திரத்தைக் கொண்டு அழிப்பது மன சான்றா என கேள்வி எழுப்பினார். என்எல்சி பிரச்சனைக்காக நாங்களும் போராடுவோம் என அவர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்