ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் டி20 லீக் தொடரில், தனது மகனுக்கு எதிராக பேட்டர் அடித்த சிக்சர் பந்தை, தந்தை கேட்ச் பிடித்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிக்பேஷ் தொடரின் 31-வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் அடிலெய்டு அணி வீரர் லியாம் ஹாஸ்கெட் (Liam Haskett) வீசிய பந்தில், பிரிஸ்பேன் அணி வீரர் நாதன் மெக்ஸ்வீனி (Nathan A McSweeney) சிக்சர் அடித்தார். அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த லியாம் ஹாஸ்கெட்டின் தந்தை, பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.