தகுதி நீக்கம் - வினேஷ் போஹத் மேல்முறையீடு

Update: 2024-08-08 02:44 GMT

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் வினேஷ் போஹத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் வினேஷ் போஹத் மேல்முறையீடு செய்துள்ளார். வினேஷ் போஹத்தின் மேல்முறையீடு இன்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது என சர்வதேச மல்யுத்த சம்மேளனத் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்