நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஓய்வு அறிவித்துள்ளார். கடைசியாக 2022ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் விளையாடிய அவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த ஒரே நியூசிலாந்து வீரர், டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 3வது நியூசிலாந்து வீரர் உள்ளிட்ட சாதனைகளை தக்கவைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தோனியை ரன்-அவுட் செய்த கப்தில், விறுவிறுப்பான இறுதிபோட்டியில் ரன் -அவுட்டானார். இந்த இரண்டு தருணங்களையும் பகிர்ந்து கப்திலை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Next Story