ஐபிஎல் - 2024... பவர் பிளேயில் பொளந்து கட்டிய ஹைதராபாத் - ஆட்டம் கண்ட டெல்லி கேபிடல்ஸ்
டெல்லிக்கு எதிரான போட்டியின் மூலம், ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மீண்டும் அதிரடியாக பேட் செய்து 20 ஓவர்களில் 266 ரன்களை குவித்த ஐதராபாத், ஐபிஎல் வரலாற்றில் நான்காவது மிகச்சிறந்த ஸ்கோரை பதிவுசெய்துள்ளது. மேலும் ஒரே சீசனில் 3 முறை 250 ரன்களுக்கும் மேல் குவித்த முதல் அணி என்ற பெருமையை ஐதராபாத் அணி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் குவித்த ஐதராபாத் அணி, பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.