இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரம் மோன்ஃபால்கோன் (Monfalcone).... கடல் சூழ்ந்த இந்நகரில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்....
இவர்களில் புலம்பெயர்ந்தவர்கள் அதிகம்.... குறிப்பாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கப்பல் கட்டும் பணிகளிலும் துறைமுக வேலைகளிலும் சுமார் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
மோன்ஃபால்கோன் நகரின் மேயர் Anna Maria Cisint.... வலதுசாரி கட்சியைச் சேர்ந்த இவர்தான், தனது நகரில் யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என விநோத உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மீறி விளையாடினால் 100 யூரோ... அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டிற்கு தடை விதித்ததற்கு மேயர் மரியா ஒரு காரணமும் சொல்லி இருக்கிறார்.
புலம்பெயர்ந்து வசிப்பவர்கள் எங்கள் வரலாற்றையும் கலாசாரத்தையும் அழித்து வருகின்றனர். கிரிக்கெட் பந்து ஆபத்தானது என்று கூறி இருக்கிறார்.
மட்டுமின்றி புலம்பெயர்ந்தவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை... விருப்பப்படுபவர்கள் நகரைத் தாண்டி வேறு எங்கேயாவது விளையாடிக் கொள்ளட்டும் என கோபத்துடன் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் அவர்.....
புலம்பெயர்ந்த வங்கதேசத்தினர்தான் அங்கு அதிகம் கிரிக்கெட் விளையாடும் நிலையில், மத ரீதியாக பிளவுபடுத்த தாங்கள் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வங்கதேசத்தினர் கூறியுள்ளனர்.
நாங்கள் செலுத்தும் வரி எங்கே செல்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், இப்படி எல்லாம் தொடர்ந்து நடந்தால் மோன்ஃபால்கோனைவிட்டு வெளியேற நேரிடும் என வருத்தத்துடன் பேசியுள்ளனர்.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான வெறுப்பை விளையாட்டின் மீது திருப்பியுள்ள மேயர் மரியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.