இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் செயலாளராக இருந்த ஜெய்ஷா, சமீபத்தில் ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இத்தகைய சூழலில் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்றுள்ளார். ஐசிசி தலைவராக பொறுப்பேற்று இருப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்றும், ஐசிசி உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெய்ஷா கூறியுள்ளார். 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ள சூழலில் உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கிரிக்கெட்டை மாற்றுவதற்கு செயல்படுவோம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐசிசி தலைவராக ஒருவர் அதிகபட்சம் 6 ஆண்டுகள் பதவி வகிக்கலாம். இதற்கு முன்பாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.