முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. மகளிர் அணி

Update: 2024-12-06 00:17 GMT
  • இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நூறு ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய வீராங்கனை மேஹன் ஷட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை பெற்றுள்ளது.





Tags:    

மேலும் செய்திகள்