சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான தோனி, 103 வயது முதியவரும், சிஎஸ்கே ரசிகருமான ராமதாஸுக்கு, தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார். ஜெர்சியில் உங்கள் ஆதரவுக்கு நன்றி தாத்தா என்று எழுதி, தோனி தனது கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். அந்த ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் முதியவரிடம் ஒப்படைத்துள்ளது. ஜெர்சியை நேரில் கண்ட முதியவர் மகிழ்ச்சியில் தோனிக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்."உங்கள் ஆதரவுக்கு நன்றி தாத்தா" என ஜெர்சியில் எழுதிய தோனி