மகளிர் ஆசிய கோப்பை தொடர்-பாக்.-ஐ தோற்கடித்த இந்தியா.. கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவைக் காண ஆர்வம்
இலங்கையில் பாகிஸ்தானை வெற்றி கொண்ட பிறகு மாற்றுத்திறனாளி ரசிகையை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அவருக்கு ஸ்மார்ட் போனை பரிசளித்து மகிழ்ந்தார்... மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது... போட்டியைக் காண வந்த ஸ்மிருதி மந்தனாவின் மாற்றுத்திறனாளி ரசிகையான சிறுமி ஆதிஷா ஹெரா போட்டிக்குப் பின் ஸ்மிருதி மந்தனாவை சந்தித்தார்.. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், "பல சவால்களை கடந்து மைதானத்திற்கு வந்த ஆதிஷா தனது பேவரைட் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதியுடனான சந்திப்பின் போது அவருக்கு ஸ்மார்ட்போன் பரிசளித்தார் ஸ்மிருதி" என பதிவிட்டுள்ளது... ஸ்மிருதிக்கு சிறுமியின் தாய் நன்றி தெரிவித்தார்...