ஃபெராரியை `மிஸ்' செய்துவிட்டாய் ஆர்யவீர் - மகனைப் பாராட்டி சேவாக் பதிவு | Virender Sehwag | Aryavir

Update: 2024-11-23 02:55 GMT

கூச் பெஹார் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் 297 ரன்கள் அடித்த நிலையில், 23 ரன்களில் தனது மகன் ஃபெராரி கார் பரிசை இழந்துவிட்டதாக சேவாக் கூறியுள்ளார்.

கூச் பெஹார் கோப்பை தொடரில் சேவாக்கின் மகனும் டெல்லி வீரருமான ஆர்யவீர் சேவாக், மேகாலயா அணிக்கு எதிரானப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி 297 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சேவாக்கின் அதிகபட்சமாக 319 ரன்கள் உள்ள நிலையில் ஆர்யவீர் முச்சதத்தை நெருங்கி கவனம் ஈர்த்துள்ளார். தனது அதிகபட்ச ஸ்கோரை தாண்டினால் ஃபெராரி கார் பரிசாக அளிப்பதாக ஆர்யவீரிடம் சேவாக் ஏற்கனவே கூறி இருந்துள்ளார். இந்நிலையில், தனது மகன் ஆர்யவீரைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சேவாக், 23 ரன்களில் ஃபெராரியை இழந்துவிட்டதாகவும், சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த போட்டிகளில் தன்னைப்போல் பல சதங்களை அடிக்க வேண்டும் என்றும் நெகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்