ஐ.பி.எல். தொடரின் 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, கொல்கத்தா அணி அபார வெற்றி வெற்றி பெற்றது. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸை இழந்ததால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர். 'குறிப்பாக, லக்னோவின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிக்சர்களாக பறக்கவிட்ட சுனில் நரைன், வெறும் 39 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி, 235 ரன்களை குவித்தது. 236 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் தந்தனர். 16 புள்ளி ஒரு ஓவர் வரை மட்டுமே விளையாடிய லக்னோ அணி, 137 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, 16 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது...