ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 274 ரன்களும் வங்கதேசம் 262 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம் நான்காம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேசம், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்றி வரலாற்று . சாதனை படைத்துள்ளது