பிரஸ் மீட்டில் ஆதங்கத்தை கொட்டிய அஸ்வின் தந்தை..! அடுத்த நொடியே பரபரப்பு ட்வீட் போட்ட அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அஷ்வின் சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு பேட்டியளித்த அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன், அஸ்வினுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதாகவும், எத்தனை நாள்தான் அவர் பொறுத்துக் கொண்டிருப்பார் என்றும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அஷ்வின் நகைச்சுவையாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தைக்கு மீடியாவை அணுகுவதில் அனுபவம் இல்லை என்றும், அவரது கருத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கவுண்டமணி ஸ்டைலில், 'டேய் ஃபாதர்.. என்னடா இதெல்லாம்?' என்றும் தன் தந்தையை கலாய்த்துள்ளார்...