பேட்டிங், பவுலிங்கில் அசத்தி ஆட்டநாயகனான அஸ்வின்

Update: 2024-09-22 13:38 GMT

பேட்டிங்கை போல, பந்துவீச்சிலும் அஸ்வின் - ஜடேஜா ஜோடி அசத்தியதால் வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 113 ரன்களும், 2வது இன்னிங்ஸில் பந்துவீச்சில் 6 விக்கெட் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார். அடுத்த போட்டி கான்பூரில் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது

Tags:    

மேலும் செய்திகள்