உலுக்கிய விஷச்சாராய விவகாரம்.. ட்விஸ்ட் கொடுத்த போலீஸ் | Kallakurichi | Thanthitv
உலுக்கிய விஷச்சாராய விவகாரம்.. ட்விஸ்ட் கொடுத்த போலீஸ் | Kallakurichi | Thanthitv
#thanthitv
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி, சுமார் 68 பேர் பலியான விவகாரம் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரிக்க, தமிழ்நாடு அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், விஷச்சாராயம் அருந்தி, மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 161 பேரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தனித்தனியாக விசாரணை நடத்தினார். தொடர்ந்து, காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என, 80 பேரிடம் விசாரிக்க முடிவு செய்து, சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம் ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் என 5 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.