ஆர்எஸ்எஸ். அணி வகுப்பு விவகாரம்.. "நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.." எச்சரித்த கோர்ட்
ஆர்எஸ்எஸ். அணி வகுப்பு விவகாரம்.. "நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.." எச்சரித்த கோர்ட்
#thanthitv
வரும் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 16 இடங்களில் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில், தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசும் காவல்துறையும், கண்ணாமூச்சி விளையாடுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மறு ஆய்வு செய்வது குறித்தும் தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செவ்வாய்கிழமைக்கு தள்ளிவைத்தார்.