வைகோவின் இடது தோளில் 3 இடங்களில் எலும்புகள் உடைந்திருந்த நிலையில், அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளதாகவும், 40 நாள்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்... எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட துரை வைகோ, கட்சிக்காரர்கள், நலம் விரும்பிகள் வைகோவை சந்திக்க வருவதைத் தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.