உலகையே கட்டி ஆளும் 3மெகா சக்தி-நேருக்கு நேர் சந்தித்த முதல்வர் இந்தியாவையே திரும்ப வைத்த US மீட்டிங்

Update: 2024-09-01 03:15 GMT

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஐ. ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக. முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

ஆப்பிள் நிறுவன உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் தமிழகம் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகலை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஏ.ஐ. ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து பேசினார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக. முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறை பயணம்

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளுடன் சந்திப்பு - அழைப்பு

இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் - ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு

கூகுள் நிறுவன அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மேற்கொள்ள அழைப்பு

தமிழ்நாட்டில் ஏ.ஐ. ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்