த.வெ.க-வின் புது அவதாரம் - விரைவில் அறிவிக்க போகும் தேர்தல் ஆணையம்

Update: 2024-06-08 09:32 GMT

த.வெ.க-வின் புது அவதாரம் - விரைவில் அறிவிக்க போகும் தேர்தல் ஆணையம்

தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க வரும்‌ 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த், பொருளாளராக வெங்கடரமணன், தலைமை நிலையச் செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை விஜய் நியமித்தார். இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை, மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்