யார்... யார்..? தானே நேருக்கு நேர்- விஜய் எடுத்த முடிவு - காத்திருக்கும் அறிவிப்பு.. பரபரக்கும் தவெக

Update: 2025-01-10 16:17 GMT

இந்த மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனம் செய்யக்கூடிய பணிகளை முடிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை இல்லாத மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து, ஆனந்த், பொறுப்பாளர்களிடம் தெரிவித்தார். மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யக்கூடியவர்கள், ஒன்றியம், நகரம், பகுதிகளுக்கு எப்படி நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கத்தையும் வழங்கினார். அனைத்து பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைத்து பட்டியலை உருவாக்கி, 20ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனிடையே மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களை, விஜய் தனி தனியாக நேரில் சந்தித்து அவர்களிடம் நேர்காணல் செய்ய உள்ளார். அதன் பின்னரே கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்