சென்னை புது வண்ணாரப்பேட்டையில், தவெக நிர்வாகியை வீடு புகுந்து தாக்கி ஆசிட் ஊற்றி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தவெக நிர்வாகியான தினேஷ் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் இடையே இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்ட நிலையில், அரவிந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரவிந்த் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.