``நடவடிக்கை பாயும்’’ - தாசில்தாரை லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் பொன்முடி | Minister Ponmudi | DMK
பட்டா வழங்கவில்லை என்றால் நடவடிக்கை பாயும் என்று, வட்டாட்சியரை அமைச்சர் பொன்முடி லெஃப்ட் ரைட் வாங்கினார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட காடகனூர் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அவர் திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் கலந்துரையாடியபோது, பட்டா வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, வட்டாட்சியரை அழைத்த அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் கையால் பட்டா வழங்க உள்ளதாகவும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எச்சரித்தார்.