துணை முதலமைச்சர் உதயநிதி மீதான வழக்கு... உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு
சனாதனம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரத்தில், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை, வரும் பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சனாதன பேச்சு விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு, ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.