"பகுத்தறிவு இல்லாதவர்கள் பகுத்தறிவு பற்றி பேசக் கூடாது" - கி.வீரமணி ஆவேசம்

Update: 2025-01-10 05:52 GMT

பெரியாரைப் பற்றி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் ஆனால் அறிவிலிகளின் கருத்திற்கு பதில் சொல்ல அவசியமில்லை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பில் நீதித்துறையிலும் சமூக நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கி.வீரமணி பகுத்தறிவு இல்லாதவர்கள் பகுத்தறிவு குறித்து பேசக்கூடாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்