கால் டாக்சி ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக்கொலை.. அடுத்து நடந்த அதிரடி.. 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்
சென்னையில் கால் டாக்சி ஓட்டுநரை வெட்டிக் கொன்ற ரவுடி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலவாக்கத்தை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் ராஜா, தேனாம்பேட்டை பாரதியார் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி மணிகண்டன் என்ற வாண்டு மணி மற்றும் இருவர், முன்விரோதம் காரணமாக ராஜாவை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவத்தின்போது அங்கு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர், ரவுடி வாண்டு மணியை பிடிக்க முயன்ற போது கத்தியை காட்டி மிரட்டி தப்பியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தரமணி பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி வாண்டு மணி, அவரது நண்பர்கள் ராகுல், விக்னேஷை கைது செய்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.