டாஸ்மாக முறைகேடு விவகாரம் தொடர்பா தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரு. - டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரிக்க வேண்டும் அப்டினும்- தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாஸ்மாக் மோசடி குறித்து அமலாக்கத் துறை பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளை பார்த்தால், திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவுக்கு இருக்கிறது - இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணிக்கு காரணமா அப்டினு கேள்வி எழுப்பியிருக்கிறதோட - எத்தனைக் கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்னு கூறியிருக்காரு.
திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என தவெக தலைவர் விஜய் கூறியது சரிதான் என்றும், புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.