சென்னை நங்கநல்லூரில், மதுக்கடையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். 8 பேரை கைது செய்து பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், தகவல் அறிந்து ஏராளமான பா.ஜ.க.வினர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.