"கோட்டையை பிடிக்க வேண்டும்" - சூளுரைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Update: 2024-11-11 02:50 GMT

செங்கோட்டையை போல, ஜார்ஜ் கோட்டையிலும் கொடியேற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொண்டர்களிடம் சூளுரைத்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் குழு பயிலரங்கத்தில் பேசிய அவர், பாஜக தான் இந்தியாவை 3வது முறையாக சிறப்பாக ஆண்டு வருவதாகவும், இதற்கு முன் நேரு 3 முறை ஆண்டார், ஆனால் அப்போது பெரிய அளவில் ஊடகங்கள் இல்லாததால், விமர்சனம் இல்லை எனவும் கூறினார்., தமிழ்நாட்டின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பாஜக சார்பில் கொடியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்