டாடாவுக்கு எதிராக கண் சிவக்க கொந்தளித்த சீமான் | Seeman | TATA

Update: 2024-08-31 08:06 GMT

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வர அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கிய தனது தொழிற்சாலையைப் பாதியில் மூடிவிட்டு, நோக்கியா நிறுவனம் சென்றதற்கு என்ன பதில் கூறப்போகிறார்? என்று வினவியுள்ளார். தனியார் நிறுவனங்களில் வட நாட்டவர்களை பணியமர்த்தும் போக்கை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? தமிழ்நாட்டில் குடியேறும் வட நாட்டவர் குறித்து தமிழ்நாடு அரசிடம் என்ன தரவுகள் உள்ளது? என அடுக்க‌டுக்காக கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்கள் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பினைத் தர உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்