"ஆளுநர் வெளிநடப்பு... முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று!" வைகோ ஆவேசம் | RN Ravi

Update: 2025-01-06 13:19 GMT

சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறி ஆளுநர் வெளியேறி இருப்பது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என, தெளிவாகத் தெரிகிறது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் பின்பற்றப் பட்டு வரும் மரபு அடிப்படையில் ஆளுநர் உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கடந்தாண்டே சட்டப்பேரவை தலைவர், பேரவை மரபு குறித்து ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார் என்றும்,

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு அதையே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி செயல், கடும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதும்,

அரசியல் கட்சிப் பிரதிநிதி போல், அரசுக்கு எதிராக அவதூறுகளை ஆளுநர் அள்ளி வீசி வருவதும், அவர் வகித்து வரும் அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றது அல்ல என்று வைகோ கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்