காசநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளை அரசு இலவசமாக வழங்குவதால், பாதிக்கப்பட்டவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உலக காச நோய் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்டுக்கு 3 லட்சம் பேர் காச நோயால் இறப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்த போதும், அதனை முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்தார்.