``இந்த வீதி என்ன பாகிஸ்தான்லயா இருக்கு.. போக கூடாதா?’’ - போலீசிடம் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டிய ஹெச்.ராஜா
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்சி நிர்வாகி விழாவிற்கு செல்வதற்காக இளையான்குடி வழியாக சென்ற எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கு அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவர் இளையான்குடி என்ன பாகிஸ்தானில் உள்ளதா ? என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நகர் பகுதி வழியாகவே அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.