"யாத்திரை செல்வது ராகுலே இல்லை..! யார் அந்த பாடி டபுள்.....?" பரபரப்பை கிளப்பிய பிஸ்வா சர்மா

Update: 2024-01-28 10:13 GMT

அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் போது ராகுல் காந்திக்கு டூப்பாக செயல்பட்ட பாடி டபுள் யார் என்று விரைவில் அம்பலப்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்...

மணிப்பூரில் இருந்து மும்பை வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை நடத்தி வருகிறார்... பாஜக அரசு ஆட்சி செய்யும் அசாமில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை யாத்திரை நடத்தப்பட்டது... அப்போது இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வார் சர்மா என்று ராகுல் சாடியிருந்தார். இதனிடையே காங்கிரஸ் தொண்டர்கள் கவுகாத்தி எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்ததால், நிலைமை விஸ்வரூபம் அடைந்தது... இச்சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் போது அசாமில் ராகுல் காந்தி பயன்படுத்தியதாகக் கூறப்படும் பாடி டபுளின் பெயர் மற்றும் முகவரியை விரைவில் வெளிப்படுத்த உள்ளதாகவும், சில நாட்கள் காத்திருக்குமாறும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்... யாத்திரை பேருந்தில் அமர்ந்து மக்களை நோக்கி கையசைத்தது ராகுல்காந்தியாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்