தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறந்ததாக மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் என்பதே தனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என்று தெரிவித்தார்.