கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு
விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடப்படாதது, அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். முந்தைய காலங்களில் பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து சரிவர பாடப்படாததை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்,
தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தவறாமல் இசைக்கப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.