ராமதாஸ்-அன்புமணிக்கு புத்தாண்டு நாளில் ஷாக்... மொத்தமாக தலைகீழான நிலை... எதிர்பாரா ட்விஸ்ட்

Update: 2025-01-01 13:48 GMT
  • பாமக மாநில இளைஞர் அணி தலைவர் நியமனத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பொதுக்குழுவில் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது. இதனையடுத்து பனையூர் இல்லத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 9 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளோடு அன்புமணி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக புத்தாண்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை பனையூர் அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாசையும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என கூறப்பட்டதால், புத்தாண்டு தினத்தில் தைலாபுரம் மற்றும் பனையூர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தைலாபுரம் தோட்டம் தொண்டர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கட்சியின் கௌரவ தலைவர் மணி, சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ராமதாஸிடம் வாழ்த்து பெற்று சென்றனர். அதேபோல் புத்தாண்டு தினத்தில் அன்புமணியை சந்திக்க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வராததால் பனையூர் அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்