"எனக்கென்று சொந்தமா ஒரு வீடு கூட இல்லை.." - பிரதமர் மோடி உருக்கம் | PM Modi | BJP
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தனக்காக சொந்த வீடு கட்டியது இல்லை, மக்களுக்காக 4 கோடி வீடுகளை வழங்கியுள்ளேன் என்றார். நான்கூட சீஷ் மஹால் போல மாளிகை கட்டியிருக்கலாம், ஆனால் மக்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு என்றார். டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், அரசு மாளிகையை 45 கோடிக்கு நவீனப்படுத்தியதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இதனை மையப்படுத்தி ஆம் ஆத்மியை விமர்சித்த பிரதமர் மோடி, அக்கட்சியை இந்தியில் ஆப்பதா, அதாவது பேரழிவு என விமர்சனம் செய்தார். 2025 ஆம் ஆண்டு தலைநகரில் நல்லாட்சிக்கான புதிய திசையை கொடுக்கும், மக்கள் மற்றும் தேசியநலன் சார்ந்த புதிய அரசியல் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.