சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

Update: 2024-12-20 10:32 GMT

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன... நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மக்களவையில் இன்று காலை பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்றும் அதை மீறி யாரேனும் போராட்டம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். தொடர்ந்து மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சியினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்