அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்... அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக நடைபெற்ற பண மோசடி வழக்கில் சாட்சிகள் அரசுத்துறை ஊழியர்களாக இருக்கிறார்கள் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அமலாக்கத்துறை வாதத்தையும் பதிவு செய்துக் கொண்ட நீதிமன்றம், விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் விவரத்தையும், சாட்சியங்கள் விவரத்தையும், சாட்சிகளில் மொத்தம் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் தமிழக அரசு பதில் மனுவாக ஜனவரி 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.