சினிமா வடிவம் வந்த பிறகு நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருவதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். சென்னை பெரம்பூரிம் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அமைச்சர் சேகர் பாபு, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்டேர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, கடவுளை யாரும் நேரில் பார்த்ததில்லை, நம் அனைவருக்கும் தெரிந்த முதல் கடவுள் அம்மா என்று சொல்லி அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்தை தெரிவித்தார்.