PM Modi Cabinet Meeting | பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் - முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காரீஃப் பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதே போல், மின்னணுப் பொருட்கள் வழங்களில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பாசன இணைப்புத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.