பாஜக நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3 தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. பாஜக ஓபிசி அணி செல்லூர் மண்டல செயலாளராக பதவி வகித்து வந்த, கருப்பசாமி கார் டிரைவராகவும் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கூடல் புதூர் பகுதியில் காரில் இருந்து கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய போலீஸார், தற்கொ*யா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பசாமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உரிய விசாரணை நடத்துமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.