பலா-வுடன் என்ட்ரி கொடுத்த ஓபிஎஸ்... ஆரத்தி எடுத்து, குலவை இட்ட பெண்கள், சிறுமிகள்... உற்சாக வரவேற்பு

Update: 2024-04-07 15:19 GMT

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழத்தை காட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாஜக ஆதரவோடு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஒ.பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வழுதூர், செம்படையார் குளம், தாமரைக் குளம், அகஸ்தியர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். அவருக்கு ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆரத்தி எடுத்தும், குலவை இட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் நின்றபடி, தனது சின்னமான பலாப்பழத்தை காட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்