சிறையில் உயிரிழந்த பாஷா குடும்பத்தினரை நேரில் சந்தித்த திருமாவளவன்

Update: 2024-12-27 04:48 GMT

சிறையில் உயிரிழந்த பாஷா குடும்பத்தினரை நேரில் சந்தித்த திருமாவளவன்

சிறையில் உயிரிழந்த அல் உம்மா இயக்க தலைவர் பாஷாவின் குடும்பத்தினரை, விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கோவை குண்டு வெடிப்பு கைதி , அல் உம்மா இயக்க தலைவர் பாஷா கடந்த 16 ம் தேதி சிறையிலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், உயிரிழந்த பாஷாவின் மகன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்