மேயர் பிரியா VS BJP உமா ஆனந்த் - அனல்பறந்த காரசார விவாதம்

Update: 2025-03-22 02:22 GMT

சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய 350 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பட்ஜெட், நிதி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது என பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு பதிலளித்த அவர், ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு சொல்கிறது. இதன் காரணமாக சொத்து வரியை உயர்த்தி ஆவணங்களை சமர்பித்த போதிலும் மத்திய அரசு 350 கோடி ரூபாய் நிதியை வழங்கவில்லை என்று தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்