ஆந்திராவில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக, தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க இடையே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பா.ஜ.க.வுக்கு மக்களவைத் தேர்தலில் நான்கு இடங்களும், சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களும் ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி முன்வந்தது. இந்நிலையில் பா.ஜ.க ஆறு மக்களவை இடங்களும், 10 சட்டமன்ற இடங்களும் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று அல்லது நாளை, பா.ஜ.க மற்றும் தெலுங்கு தேசம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு, கூட்டணி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.