நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் பல்வேறு நில உரிமையாளர்களின் விவசாய நிலங்களும் அடங்கும்..
அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விருந்து வழங்கினார்.
பல சுவாரஸ்யங்களுடன் அரங்கேறிய இந்த நிகழ்வில், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட தலைவர் பரணி பாலாஜி, பந்தல் அமைப்பாளர் விஸ்வநாதனுக்கு தவெக தலைவர் விஜய் தங்க மோதிரம் வழங்கினார்.
அத்துடன் வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்து உபசரித்து... பாராட்டியதால் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர் விவசாயிகள்...
மற்றொரு புறம், விஜய்-ஐ நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி என நெகிழ்கின்றனர் வருகை தந்தவர்கள்...