தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என விவாதிக்கவும் செயல்படுத்தவும் பல விஷயங்கள் இருப்பதாகவும் அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், ஆளுநருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும் எனவும் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.